வன்னி நிலம் சிங்களப் படைக்கு வரலாற்றுத் தோல்வியை வழங்கும் - விடுதலைப்புலிகள் ஏடு தெரிவிப்பு
[ தமிழின் வெற்றி ][ Sep 05 22:35 GMT ]
சிங்களப்படைத் திமிருக்கு வன்னிப் போரரங்கில் தகுந்த பாடம் புகட்டப்படும் எனத் தற்போது வெளிவந்துள்ள விடுதலைப் புலிகளின் அதிகார பூர்வ ஏடான ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டின் பிரதான தலைப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி நில அமைப்பும், புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப் புரட்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அப்போது வன்னி நிலம் சிங்களப் படைக்கு ஒரு வரலாற்றுத் தோல்வியை வழங்கும். [  ]
ஆட்கடத்தல் செயற்பாடுகளும் யுத்தக் குற்றங்களாகத் தக்கவையே
[ சுடர் ஒளி ][ Sep 05 11:02 GMT ]
இலங்கையில் பெரும் எண்ணிக்கையானோர் பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நபர்கள் சூத்திரதாரிகள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபை விசனமும் கவலையும் வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தை ஒட்டிய நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் உள்ளனவா என்பதை அவதானிப்பதில் அமெரிக்க அரசு அக்கறை கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை இந்தப் பின்னணியிலேயே நாம் பார்க்கவேண்டும். [  ]
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி; 12 பேர் காயம்
[ புதினம் ][ Sep 05 10:53 GMT ]
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரி என தெரியவந்துள்ளது. இவரை பிரத்தியேகமாக சிறப்பு உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு உடனடியாக சிறிலங்கா படைத்தரப்பு கொண்டு சென்றுள்ளது. [  ]
மனிதாபிமான பாதையினை இருதரப்பும் அங்கீகரித்தால் மாத்திரமே மக்களால் பாதுகாப்பாக வெளியேற முடியும் - கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவிப்பு
[ வீரகேசரி ][ Sep 04 20:16 GMT ]
மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புக்களும் மனிதாபிமான பாதையினை ஏற்று அங்கீகரித்தால் மாத்திரமே பொதுமக்களால் போர் நடைபெறும் பிரதேசத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும் என கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. [  ]
பிரிவினைச் சிந்தனைக்கு வலுவூட்டும் பயணக் கெடுபிடி நடைமுறை
[ சுடர் ஒளி ][ Sep 04 02:57 GMT ]
யாழ். மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருவதற்கான பயண அனுமதி தொடர்பாக இராணுவத் தரப்பினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கடுமையாக எதிர்த்திருக்கின்றார். [  ]
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பினை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
[ வீரகேசரி ][ Sep 02 20:03 GMT ]
இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் முன்வர வேண்டும். தமது முகவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கையினை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். [  ]
நாச்சிக்குடா முன்னேற்ற நடவடிக்கை புலிகளால் முறியடிப்பு: ஏழு சடலங்கள் உட்பட இராணுவ தளபாடங்கள் மீட்பு
[ தமிழின் வெற்றி ][ Sep 02 03:04 GMT ]
நாச்சிக்குடாப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு சடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத் தளபாடங்களும் மீட்கப்பட்டன. இராணுவத் தளபாடங்களும் மீட்கப்பட்டன. நாச்சிக்குடாவைக் கைப்பற்றும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு இலங்கை இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர். [  ]
அலரிமாளிகையை அண்மித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லும் வாகனங்கள் பறிமுதல்: அரசாங்கம் அறிவிப்பு
[ லங்கா தகவல் நிறுவனம் ][ Sep 01 03:19 GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் அலரிமாளிகையை அண்மித்த உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் லொறிகள், பார ஊர்திகள், ஊர்வலங்கள், பேரணிகள், அரசியல் ஒன்று கூடல்கள் மற்றும் வாகனப் பேரணிகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையையும் மீறிச் செல்லும் வாகனங்களுக்குத் தடைவிதிக்கப்படுவதுடன், தொடர்ந்தும் அந்தத் தவறைச் செய்யும் பட்சத்தில் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் அசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. [  ]
வன்னிமக்கள் எதிர்நோக்கவுள்ள அவலம் குறித்து அச்சமடைகிறேன்-கேசரி வார இதழுக்கான விசேட செவ்வியில் யாழ். ஆயர் தெரிவிப்பு
[ வீரகேசரி ][ Aug 31 05:20 GMT ]
வன்னியில் மக்களுக்கு பாதுகாப்பானதோர் பகுதியென எதுவும் அற்றதோர் சூழல் உருவாகியிருப்பதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கவலை தெரிவித்துள்ளதுடன் தொடரும் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அடுத்து வரும் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளவுள்ள அவலத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது பெரும் அச்சமாக இருப்பதாகவும் கூறுகின்றார். [  ]
மட்டு. சிறையில் ஈ.பி.டி.பியினர் மீது கருணா குழுவினரே குண்டு வீசினர்!
[ சுடர் ஒளி ][ Aug 30 04:18 GMT ]
மக்களே அரசியல் பலத்தையும்,ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் ஜனநாயகம் என்று நம்புகின்றோம் என மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும்? [  ]
|
சென்னையிலுள்ள துணைத்தூதரகத்தை அகற்ற வேண்டும் – மீனவர் விடுதலை வேங்கைகள்
[ ஐரோப்பிய தொலைக்காட்சி ][ Sep 05 11:08 GMT ]
இந்தியாவிற்கான சிறீலங்கா துணைத்தூதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, அவரையும், சென்னையிலுள்ள துணைத் தூதரகத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா துணைத் தூதுவர் அம்சா, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் மூன்றாவது சக்தி ஒன்று இருப்பதாகத் தெரிவித்திருந்தார். [  ]
சர்வதேச அரச சார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அநீதியான முறையில் தாக்கப்படுகின்றன-அமெரிக்க தூதுவர்
[ வீரகேசரி ][ Sep 05 11:00 GMT ]
சர்வதேச அரச சார்பற்ற தொண்டுநிறுவனங்கள் தமது பணியினை இலங்கையில் மேற்கொண்டு வரும் வேளைகளில் அவை அநீதியான முறையில் தாக்கப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். [  ]
இனப் பாகுபாட்டுப் போக்கை நியாயப்படுத்தும் எத்தனங்கள்
[ சுடர் ஒளி ][ Sep 04 20:19 GMT ]
தென்னிலங்கையின் கருத்தில் நோக்கில் இரண்டு அடிப்படை அம்சங்கள் ஆழ ஊறியிருக்கின்றமையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்...தலைநகரில் தமிழர்கள் இனப்பாகுபாட்டு அடிப்படையில் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து பல்வேறு தொடர் இன்னல்களுக்கு இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். [  ]
உலகத் தமிழர்களுக்கு பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து வைரமுத்து
[ தற்ஸ் தமிழ் ][ Sep 04 03:37 GMT ]
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழர்க்குப் பிறந்த பிள்ளைகள் தமிழ் படித்தே ஆக வேண்டும். இங்கே இரண்டு அழகிய கண்மணிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். ஒவ்வொரு மேடையிலும் வெவ்வேறு பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பொதுப்பாடல் தேவை. [  ]
இனியபாரதியே உணவு கொடுத்த தாயை சுட்டுக்கொன்றார் – உள்ளுர் மக்கள்
[ ஐரோப்பிய தொலைக்காட்சி ][ Sep 04 02:36 GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளுள் ஒருவரான ஸ்டாலினின் தாயார், சிறீலங்கா துணைப்படைக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை பாண்டிருப்பு சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்குச்சென்ற துணைப்படைக் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். [  ]
நாச்சிக்குடா முன்னேற்ற நடவடிக்கை புலிகளால் முறியடிப்பு: 75 இராணுவத்தினர் பலி; 19 சடலங்கள் உட்பட இராணுவ தளபாடங்கள் மீட்பு
[ தமிழின் வெற்றி ][ Sep 02 19:51 GMT ]
இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 75 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 19 சடலங்கள் உட்பட இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. நாச்சிக்குடாவைக் கைப்பற்றும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு இலங்கை இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர். [  ]
பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்
[ பிபிசி தமிழோசை ][ Sep 01 20:39 GMT ]
வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது. [  ]
எதிரி தொடுக்கும் உளவியல் போருக்கு இரையாகாது உறுதியுடன் போராடுவோம் - அரசியல்துறை
[ சுவிஸ் முரசம் ][ Aug 31 05:33 GMT ]
தமிழன் அகதி இனமல்ல. போருக்கஞ்சி அடிமைகளாக வாழவிரும்பும் கோழைகளுமல்ல. இது வீரம் விளையும் தேசம். இதை மீண்டுமொருமுறை எதிரிக்கு உணர்த்தும் காலம் அண்மித்து விட்டது. பீதி எதிரிக்கானது. எதிரியின் உளவியல் போருக்கு இரையாகாமல் உறுதியுடன் போராடுவோம் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. [  ]
கொழும்பு புறக்கோட்டை அரசமரச் சந்திப் பகுதியில் குண்டுவெடிப்பு
[ தமிழ் கனேடியன் ][ Aug 30 07:48 GMT ]
கொழும்பு புறக்கோட்டை அரசடி மரச்சந்தியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 43 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார். [  ]
நளினியை விடுதலை செய்யக்கூடாது நீதிமன்றில் தமிழக அரசு மனுதாக்கல்
[ வீரகேசரி ][ Aug 30 03:55 GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மற்றும் ஜெயகுமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோரை சிறையிலிருந்து விடுதலைசெய்யக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத் திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. [  ]
|